×

குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான விளையாட்டு வீரர்கள் ஆவணங்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (குரூப்-II மற்றும் 2ஏ பணிகள்) எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இத்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்று, தங்கள் இணையவழி விண்ணப்பத்தில் ‘சிறந்த விளையாட்டு வீரர்’ என்று உரிமை கோரியுள்ள விண்ணப்பதாரர்கள், மேற்படி அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதிக்கு முந்தைய ஐந்து ஆண்டு கால பகுதியில் தாங்கள் பெற்ற விளையாட்டு சாதனைகள் தொடர்பான ஆவணங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதுகுறித்த தகவல் அவர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணை மூலமாகவும் தெரிவிக்கப்படுகிறது. அசல் விளையாட்டு சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் அனைத்தையும், அறிவிக்கையில் உள்ள படிவங்கள் I முதல் 5 வரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தேர்வாணைய இணையதளத்தில் உள்ள தங்களது ஒருமுறைப் பதிவு கணக்கின் வாயிலாக, 11ம் தேதி (இன்று) முதல் 20ம் தேதி (இரவு 11.59 மணி) வரை பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செய்ய தவறினால், அத்தகைய விண்ணப்பதாரர்களின் உரிமை கோரல் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : 2 ,TNPSC ,Chennai ,Srivenkata Priya ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து