×

சென்னை அமர்வு நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராவதற்காக அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை விபரம் வருமாறு: தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அறிவித்தனர்.

அதன் அடிப்படையில் வந்த விண்ணப்பங்களை பரிசீலித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்களுக்க அரசு வழக்கறிஞர்கள் தற்காலிகமாக 6 மாதங்களுக்கு நியமிக்கப்படுகிறார்கள். சென்னை மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞராக எஸ்.அந்தோனி வெலிங்டன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட அரசு பிளீடராக கே.பி.ஜோதீஸ்வரன், கூடுதல் அரசு பிளீடராக பி.ஆர்.கவுதமன், இ.ரவிச்சந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றங்களுக்கு குற்றவியல் வழக்கறிஞர்கள் பி.கோபிலதா, டி.பாலசுப்பிரமணியம், எஸ்.வேல்முருகன், வி.தயாசங்கர், எஸ்.அசோக்குமார், ஜி.நவீன், ஆர்.கே.பிரதீப்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞராக தன்ராஜ், போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு டி.ராஜரத்தினம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூடுதல் அரசு பிளீடர் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர்களாக எ.அரவிந்த் விக்னேஷ், ஆர்.நரேஷ்குமார், டி.ரவிக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர் நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞராக ஜி.பி.விண்ணொலி நியமிக்கப்பட்டுள்ளார். அல்லிகுளம் கூடுதல் அமர்வு நீதிமன்றங்களுக்கு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்களாக கே.நரேந்திரன், எஸ்.பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிதி மோசடி வழக்குகளை விசாரிக்கம் சிறப்பு நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞராக எஸ்.பேச்சிமுத்துக்குமார் (குற்றவியல்), எஸ்.விஜயகுமார்(சிவில்) ஆகியோரும், தடா சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளுக்கான மாவட்ட நீதிமன்றத்திற்கு அரசு சிறப்பு வழக்கறிஞராக பால்ராஜ், பொடா சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்குகளுக்கான பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு அரசு சிறப்பு வழக்கறிஞராக எஸ்.முத்துகூடலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் முழுக்க முழுக்க தற்காலிகமாது. எந்த நேரத்திலும் அவர்கள் பணியிலிருந்து எந்த முன் அறிவிப்புமின்றி நீக்கம் செய்யப்படலாம். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai Sessions Courts ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED இங்கு அரசு வழக்கறிஞர் பதவி...