×

மகாசிவராத்திரியையொட்டி வெள்ளிங்கிரி மலையில் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர்

தொண்டாமுத்தூர், மார்ச் 12:  கோவை அருகே உள்ள பூண்டி வெள்ளியங்கரி மலை மீது அமைந்துள்ள சுயம்பு லிங்கமான வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவை மாவட்டம் பூண்டியில் இருந்து அடர் வனப்பகுதியில் சுமார் 5.5 கி.மீ தொலைவினை 7 மலைகளை கடந்து சென்றால் மட்டுமே மலை உச்சி மீது அமைந்துள்ள வெள்ளிங்கிரி சுயம்பு லிங்கத்தை தரிசிக்க இயலும். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் வெள்ளிங்கி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் 7 மலையேறி சிவனை தரிசித்து வந்தனர்.

நேற்று ஈஷாவில் குறிப்பிட்ட பக்தர்களே அனுமதிக்கப்பட்ட நிலையில், சிவராத்திரியையொட்டி நேற்று தர்மபுரி, சேலம், நாமக்கல்  உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். நேற்று கால நிலை மாற்றம் காரணமாக  2 வது மலையில் இருந்தே கடும் குளிர் , பனிமூட்டம் நிலவியது. ஆனாலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது மலையேறி சாமி தரிசனம் செய்தனர். மலை உச்சியில் சிவராத்திரியையொட்டி விடிய,விடிய உற்சவருக்கு மலர்களால் அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது.

Tags : Vellingiri Hill ,Swayambhu Lingam ,Mahasivarathri ,
× RELATED கடும் குளிர், மழையிலும் வெள்ளிங்கிரி மலையில் பக்தர்கள் குவிந்தனர்