×

போலீஸ் சிறுவர் மன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு

 

கோவை, மே 25: போலீஸ் சிறுவர் மன்றத்தின் கண்காணிப்பு அதிகாரியான ராஜேஸ்வரி நேற்று கோவை வந்தார். பின்னர் கோவை புலியகுளத்தில் செயல்படும் போலீஸ் சிறுவர் மன்றத்திற்கு சென்று அங்குள்ள மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடி அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும் சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்ட போலீஸ் சிறுவர் மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். சிறுவர் மன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

The post போலீஸ் சிறுவர் மன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Rajeshwari ,Police Children's Forum ,Puliyakulam, Coimbatore ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!