×

பாலக்காடு மாவட்டத்தில் பள்ளிகள் ஜூன் 3ம் தேதி திறக்கின்றன

 

பாலக்காடு,மே25: பாலக்காடு மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 3 ம்தேதி திறந்து செயல்படும் என மாவட்டக் கல்வி இயக்குநர் பி.வி.மனோஜ் அறிவித்துள்ளார். பள்ளிகள் ஜூன் 3ம் தேதி திறப்பதையொட்டி பள்ளி கட்டடங்கள் பரிசோதனை நடத்தி உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. பள்ளிகள் திறப்பதற்கு முன்னோடியாக கட்டடங்களுக்கு பிட்னஸ் சான்றிதழ்கள் பெற்றிருக்கவேண்டும். பள்ளி வாகனங்களின் பிட்னஸ் சரி வர உள்ளதா என ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பார்வையிட வேண்டும்.

இன்று (25ம் தேதி) முதல் பள்ளி வாகனங்களின் பிட்னஸ் சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்படுகிறது. ஆர்.டி.ஓ., தலைமையில் மலம்புழாவிலுள்ள வாகனப்பயிற்சி மைதானத்தில் நடைபெறும். பள்ளியில் செயல்படும் தனியார் வாகனங்களின் ஓட்டுநர்களின் லைசன்ஸ் சரிவர உள்ளதா என பள்ளி நிர்வாகம் பார்வையிட வேண்டும் அவர்கள் ஓட்டுநர் உரிமத்தின் நகல்கள் பள்ளிகளில் சமர்ப்பித்து இருக்க வேண்டும். வாகனங்கள் முழு கண்டிஷனில் உள்ளதா, வாகனங்கள் சாலைகளில் இயக்க தகுதியுடையதா என ஆர்.டி.ஓ., அதிகாரிகளும், பள்ளி நிர்வாகம் சரி பார்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.சித்ரா அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளி வளாகங்களில் ஸ்டோர் ரூம், சமையல் அறைகள், கழிவறைகள், மேற்கூரைகள் ஆகியவை பரிசோதனை நடத்தவேண்டும். பெண்கள் பள்ளிகளில் மாணவிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளனவா என சரிப்பார்க்க ஆய்வாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். குடிநீர் தொட்டிகளை தூய்மை செய்ய வேண்டும், ஸ்டோர் ரூம்களிலும், சமையல் அறைகளிலும் சுத்தப்படுத்த வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் இவற்றை சரிபார்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

The post பாலக்காடு மாவட்டத்தில் பள்ளிகள் ஜூன் 3ம் தேதி திறக்கின்றன appeared first on Dinakaran.

Tags : Palakkad district ,Palakkad ,District Education Director ,PV Manoj ,Dinakaran ,
× RELATED திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில்...