×

மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி காரைக்காலில் 2 பேருக்கு கொரோனா

காரைக்கால், மார்ச் 12: காரைக்காலில் கடந்த 10ம் தேதி 202 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கோட்டுச்சேரியை சேர்ந்த ஒருவர், திருநள்ளாறை சேர்ந்த ஒருவர் என 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.காரைக்கால் மாவட்டத்தில் 4,052 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அதில் 3,933 பேர் குணமடைந்தனர். 51 பேர் தனிமையிலும், சிகிச்சையிலும் இருந்து வருகின்றனர்.

காரைக்காலில் முதல் தவணையாக 605 சுகாதார பணியாளர்கள், 906 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர் 318 பேர், 45 வயது முதல் 59 வயதுடைய இணை நோய்கள் கொண்டவர்கள் 60 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாவது தவணையாக சுகாதார பணியாளர்கள் 238 பேர், முன்கள பணியாளர்கள் 48 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags : Natyanjali Karaikal ,
× RELATED களரம்பட்டியில் செல்வகணபதி, மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்