டெல்லி: மூன்று சக்கர மின்சார வாகனம் வாங்க ரூ. 50,000 மானியம் வழங்கப்படும் என்று டெல்லி பாஜக அரசு அறிவித்துள்ளது. டெல்லி பாஜக அரசு அறிவித்துள்ள மின்சார கொள்கைக்கு ஏற்ப மானியம் வழங்கப்படும். டெல்லியில் மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ரூ. 30,000 மானியம் வழங்கப்படும். இ-பைக் வாங்குவோருக்கு முதல் ஆண்டில் ரூ. 30,000, 2ம் ஆண்டில் ரூ .20,000, 3ம் ஆண்டில் ரூ.10,000 மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
