×

ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்துவதா?.. கனிமொழி எம்பி கடும் கண்டனம்

 

சென்னை: ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்துவதா? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு.

தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?. மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Karnataka ,Kanylanghi ,Chennai ,Kaniwozhi ,Dimuka ,Deputy Secretary General ,Kanimozhi MP ,Tamil Nadu ,
× RELATED சொல்லிட்டாங்க…