- சிறுத்தை
- அமைச்சர்
- கே.ஏ.
- செங்க்கொட்டாயன்
- கோபி
- கே. செங்கோட்டை
- தமிழ்நாடு வருவாய்
- கே. செங்கோட்டையன்
- ஈரோடு மாவட்டம்
கோபி: பதவி விலகிய அதிமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட்டு வழங்கப்படுமா? என்பதற்கு அமைச்சர் கே.செங்கோட்டையன் பதிலளித்தார். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம், கோபியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: வருவாய் துறை, கல்வித்துறையுடன் இணைந்து மாணவர்களுக்கு டேட்டா எனப்படும் முகவரி, ரத்த வகை, ஆதார் எண், கல்வித்தகுதி போன்றவை வழங்கலாமா என பரிசீலித்து கொண்டிருக்கின்றோம். அதே நேரத்தில் வழங்கப்படும் டேட்டா சாதி அடிப்படையில் இருக்காது. பள்ளியில் சாதி இடம்பெறக்கூடாது என்பது தான் அரசின் நோக்கம். சாதி சான்றிதழை இணைப்பதாக வரும் தகவல் தவறானது. எப்போதும் இணைக்க மாட்டோம்.
மாணவர்கள் எல்லோரும் ஒன்றுதான். எல்லா மதமும் ஒன்று. டேட்டா மட்டும் அதில் இருக்கும். ரத்த வகை, கல்வி தகுதி இருக்கும். தமிழக அரசுக்கான டெல்லி பிரதிநியை நியமிப்பது அரசின் கொள்கை முடிவு. அதில் இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் சம உரிமை உண்டு. அதில் தவறு ஏதும் இல்லை. தவெகவில் விஜயபாஸ்கர் இணைவது எப்போது என விஜயபாஸ்கர் தான் யோசித்து சொல்ல வேண்டும். முடிவு அவர் கையில் தான் இருக்கிறது. இடைத்தேர்தலில் பதவி விலகிய அதிமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட்டு வழங்கப்படுமா என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். அவர்களுக்கே வழங்குவார்களா என்பதை இப்போது கூற முடியாது. இவ்வாறு அமைச்சர் கே.செங்கோட்டையன் கூறினார்.
