- கடலூர் மாவட்ட ஆளுநர் அலுவலகம்
- கடலூர்
- மாவட்ட ஆளுநர்
- கம்யூனிஸ்ட்
- ஆதித்யா செந்தில்குமார்
- கடலூர் மாவட்டம்
- என்.எல்.சி.
கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் மற்றும் வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான இழப்பீடு தொகை கொடுக்காத காரணத்தினால் நாங்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கைகளை வைக்க வேண்டி உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் இதுவரை ஐந்து முறை முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அலுவலர்கள் விவசாயிகளை தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என்று அப்புறப்படுத்தினார்கள். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் தலையீடு ஜூலை மாதம் ஒரு கூட்டம் அமைத்து உங்களுக்கு தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
