×

பச்சமுத்து கல்லூரியில் உலக மகளிர் தின விழா

தர்மபுரி, மார்ச். 10: தர்மபுரி பச்சமுத்து கலை அறிவியல் மகளிர் கல்லூரியில், உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தாளாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். துணை தாளாளர் சங்கீத்குமார், இயக்குனர் பிரியா சங்கீத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் சுந்தரம் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி (ஆடவர்) தமிழ்த்துறை உதவி பேராசிரியர் திலகவதி “விதையெனும் விருட்சம்” எனும் தலைப்பிலும், தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் கன்னல் “காலந்தோறும் பெண்“ எனும் தலைப்பிலும் பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை -தகவல் மையம் சார்பில் பெண் குழந்தையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “செல்லம்” என்ற குறும்படம் ஒளிபரப்பட்டது.  நிகழ்ச்சியில் ஆலோசகர் பேராசிரியர் பொய்யாமொழி, துணை முதல்வர் பேராசிரியர் சுந்தரம், உதவி பேராசிரியர் உதயநந்தினி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ...

Tags : World Women's Day ,Pachamuthu College ,
× RELATED சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நேர...