×

எளையாம்பாளையத்தில் கரடுமுரடான சாலை ஓராண்டாக மக்கள் அவதி

திருச்செங்கோடு, மார்ச் 9: திருச்செங்கோடு அடுத்த கோக்கலை ஊராட்சி, எளையாம்பாளையம் முதல் கோணக்காடு வரை செல்ல மண் சாலை உள்ளது. இந்த சாலை, மழையின் போது அரிக்கப்பட்டு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு முரடாக மாறியது. இதனால் சாலையில் நடந்தோ, வாகனங்களிலோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை கிராமத்துக்கு வர முடியாத நிலை உள்ளது. கடந்த ஓராண்டாக அரசுத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்களை கொடுத்த போதிலும், சாலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பெரிதும் சிரமப்படும் பொதுமக்கள், உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Elayampalayam ,
× RELATED தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்