×

காதலி கைவிட்டதால் காதலன் தற்கொலை

 

கோபி, ஜூன் 22: கோபி அருகே காதலி கைவிட்டதால் மனமுடைந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி செல்லகுட்டி பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (26). இவர் செட்டிகரட்டில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். சிவக்குமார் உப்புகாரபள்ளத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன் அந்த பெண், சிவக்குமாருடனான காதலை கைவிட்டு விட்டு வேறொருவரை காதலித்து வந்துள்ளார். இதனால், மனமுடைந்த சிவக்குமார், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Gopi ,Sivakumar ,Kaunthappadi Chellakutty Palayam ,Chettigarat… ,
× RELATED கஞ்சா விற்ற 2 பேர் மீது குண்டாஸ்