- மேத்யூஸ் குவென்கா
- பிரேசில்
- ஹெய்டி
- பென்சில்வேனியா
- ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து
- பிலடெல்பியா ஸ்டேடியம்
- ஐக்கிய மாநிலங்கள்
பென்சில்வேனியா: பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் பிலடெல்பியா அரங்கில் இன்று காலை நடந்த போட்டியில் 5 முறை சாம்பியனான பிரேசில் , குட்டி தீவான ஹைதியுடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே பிரேசில் ஆதிக்கம் செலுத்தியது. நட்சத்திர வீரர் மேத்யூஸ் குன்கா ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கோல் அடித்து கணக்கை தொடங்கினார். தொடர்ந்து 36வது நிமிடத்தில் தனது 2வது கோலை அடித்து 2-0 என முன்னிலையை ஏற்படுத்தினார். 39வது நிமிடத்தில் பிரேசிலின் முக்கிய விங்கரான ரஃபின்ஹா காலில் காயம் காரணமாக வெளியேறினார்.
முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45+3 நிமிடம்) வினிசியஸ் ஜூனியர்கோல் அடிக்க 3-0 என பிரேசில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் ஹைதி அணியினர் கோல் அடிக்க கடுமையாக போராடினர். ஆனால் பிரேசில் வீரர்கள் தடுப்பாட்டத்தை பலப்படுத்தியதால் கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் மொராக்கோவுடன் 1-1 என டிரா செய்தபிரேசில் அணிக்கு இதுமுதல் வெற்றியாகும். இதன் மூலம் 4 புள்ளிகளுடன் சி பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது. 2 போட்டியிலும் தோல்வி அடைந்த ஹைதி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
