- 2026 உலகக் கோப்பை கால்பந்து
- செ குடியரசு
- தென் ஆப்பிரிக்கா
- அட்லாண்டா
- அட்லாண்டா மைதானம்
- ஐக்கிய மாநிலங்கள்
அட்லாண்டா : அமெரிக்காவின் அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், குரூப் ‘ஏ’ பிரிவில் உள்ள செக் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. தங்களின் முதல் போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்த இரு அணிகளும், கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கின. போட்டி தொடங்கிய 6வது நிமிடத்திலேயே செக் குடியரசின் இளம் வீரர் சோஜ்கா பாஸ் செய்த பந்தை மிச்சல் சாடிலெக் கோலாக்கினார். இது இந்த உலகக் கோப்பைத் தொடரின் அதிவேக கோல்களில் ஒன்றாகப் பதிவானது.
அதன் பிறகு இரு அணிகளின் கோல் அடிக்கும் வாய்ப்பு நிறைவேறாத நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு 83வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர மிட் பீல்டர் டெபோஹோ மொகோயினா கோலாக்கி அசத்தினார். இதனால் 1-1 என போட்டி சமன் ஆனது. அதன் பிறகு கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி சமனில் முடிந்தது.
