- பிரதமர் மோடி
- இந்தியக் குடியரசுத் தலைவர்
- திரௌபதி முர்மு
- தில்லி
- மோடி
- குடியரசுத் தலைவர்
- இந்தியா
- திரௌபதி முர்மு
டெல்லி: இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். துணிச்சல், எளிமை, பணிவு மற்றும் பொதுச் சேவையில் தளராத அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்ட அவரது பயணம், நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.பொது வாழ்வில் பல ஆண்டுகளாக, அவர் நாட்டிற்குச் சிறப்பான சேவையாற்றியுள்ளார்.
குறிப்பாக, பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார். இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது உறுதியான அர்ப்பணிப்பு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. நாட்டுக்குச் சேவையாற்றுவதில் அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான ஆயுளைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இன்று ஒடிசாவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அவரைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
