தெலுங்கானா: ஹைதராபாத் நகரில் மாநகர போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 825 கிலோ போலியான பன்னீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 45 சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் எட்டு உற்பத்தி ஆலைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கிடைத்த போலி பன்னீர்களை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனைகளில் செயற்கைப் பால் மற்றும் தாவரக் கொழுப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட 825 கிலோ போலி பன்னீர் பறிமுதல் செய்யப்பட்டது. 45-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் எட்டு தயாரிப்பு நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த மோசடி கண்டறியப்பட்டது.
அசல் பாலாடைக்கட்டி போன்ற தோற்றமும், சுவையும் கொண்ட பாமாயில் போன்ற தாவர எண்ணெய் மற்றும் பால் அல்லாத பொருள்களைக் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீஸ் அனலாக் எனப்படும் பொருளை, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து பன்னீர் என்ற பெயரில் விற்கப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக காவல்துறை துணை ஆணையர் வைபவ் கெய்க்வாட் ரகுநாத் தெரிவித்துள்ளார்.
