×

ஒன்றிய பாஜக அமைச்சருக்கு யூடியூப் மூலம் மாதம் ரூ.2.5 லட்சம் வருமானம்: ஏழைகளுக்கு உதவுவதாக தகவல்

நாக்பூர்: டிஜிட்டல் தளங்களில் தனது உரைகள் மூலம் கிடைக்கும் வருவாயை ஏழை மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி வழங்கி வருகிறார். பாஜக மூத்த தலைவரான ஒன்றிய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றுவது வழக்கம். இவருடைய காணொலிகள் மற்றும் பேச்சுகள் யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை மக்கள் நலனுக்காக பயன்படுத்த திட்டமிட்ட அவர், தனது மறைந்த தாயின் நினைவாக மகாராஷ்டிரா மாநிலம் வடக்கு நாக்பூரில் தொடங்கப்பட்ட மருத்துவ கண்டறியும் மையத்திற்கு தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறார். டிஜிட்டல் தளங்கள் வாயிலாக தற்போது மாதம் ஒன்றுக்கு சராசரியாக 2,50,000 ரூபாய் வருமானம் கிடைப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘எனது வீடியோ உரைகள் மூலம் கிடைக்கும் வருமானம் ஏழை நோயாளிகளின் நலனுக்காகவும், அறக்கட்டளை பணிகளுக்காகவும் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. பணம் செலுத்த முடியாத ஏழை நோயாளிகளுக்கு இங்கு இலவசமாக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Union ,BJP ,Minister ,YouTube ,Nagpur ,Union Minister ,Nitin Gadkari ,Union Minister for Road Transport and Highways ,
× RELATED தமிழக சட்டசபையில் குதிரை பேரம் ...