×

காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

 

கிருஷ்ணகிரி, ஜூன் 19: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள தேவசானப்பள்ளி அக்ரகாரத்தை சேர்ந்தவர் மாது (29), கூலி தொழிலாளி. இவர் மனைவி திவ்யா(28). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், மாதுவுக்கு மதுப்பழக்கம் இருந்தது. இதனால் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில், திடீரென நேற்று வீட்டில் மாது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

Tags : Krishnagiri ,Madhu ,Devasanapalli Agrakaram ,Uttanapalli ,Krishnagiri district ,Divya ,
× RELATED ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி சமையல் கூடத்தில் தீ விபத்து