×

மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் 15ம் ஆண்டு நாட்டியாஞ்சலி


மயிலாடுதுறை, மார்ச் 8: மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் பதினைந்தாம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி இன்று இரவு துவங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் மார்ச் 8, 9, 10, 11 ஆகிய நான்கு தினங்கள் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது. இன்று நடைபெறும் துவக்கவிழா நிகழ்ச்சியில் கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலா மற்றும் மேலைநாட்டு நடன கலைஞர்களுடன் நடனமாடிய நரேந்திரா உட்பட நூற்றுக்கணக்கான நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். நான்கு தினங்களிலும் பாரதம், கதக், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முதல்நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் தலைவர் பரணிதரன் தலைமையில் செயலர் விஸ்வநாதன் மற்றும் ராமன் அகஸ்டின் விஜய், அரவிந்குமார் உள்பட தென்னக பண்பாட்டு மையமும், ஆலய நிர்வாகத்தினரும் இணைந்து நாட்டியாஞ்சலி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Tags : Mayiladuthurai ,Mayuranathar Temple ,
× RELATED பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது...