×

கபிஸ்தலம் அருகே தவறான குறுந்தகவல்களை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி இளம்பெண் திருமணத்தை நிறுத்திய உறவினர் கைது

தஞ்சாவூர், மே20:கபிஸ்தலம் அருகே தவறான குறுந்தகவல்களை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி இளம்பெண் திருமணத்தை நிறுத்திய உறவினர் கைது செய்யப்பட்டார். கபிஸ்தலம் அருகே உள்ள திருவைகாவூர் ஊராட்சி புதுக்கண்டி படுகை பகுதியை சேர்ந்தவர் ராஜகுரு (38). இவரது உறவுக்கார பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ஒரு குடும்பத்தினர் அந்த பெண்ணை, திருமணத்துக்கு பெண் பார்த்துவிட்டு சென்றனர்.இந்நிலையில் ராஜகுரு சம்பந்தப்பட்ட மாப்பிள்ளை குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு அந்தபெண் குறித்து தவறான குறுந்தகவல்களை அவர்களுக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணையும் ராஜகுரு தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகுருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கபிஸ்தலம் அருகே தவறான குறுந்தகவல்களை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி இளம்பெண் திருமணத்தை நிறுத்திய உறவினர் கைது appeared first on Dinakaran.

Tags : Kapistalam ,Thanjavur ,Rajaguru ,Pudukandi ,Thiruvaikavur panchayat ,
× RELATED தஞ்சாவூர் ஆர்.ஆர். நகர் பகுதியில்...