கோயில் விழா பாலக்கோட்டில் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை

தர்மபுரி, மார்ச் 8: புதூர்மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி, வருகிற 11ம் தேதி பாலக்கோடு பகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பாலக்கோடு புதூர்மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி, வருகிற 11ம் தேதி (புதன்கிழமை) பாலக்கோடு வட்டத்திற்கு மட்டும், உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற இருக்கும் அரசு பொதுத்தேர்வு, ஏற்கனவே திட்டமிட்டவாறு நடைபெறும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் 28ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாகும்.  உள்ளூர் விடுமுறை நாளன்று, பாலக்கோடு சார்நிலைக் கருவூலத்தில் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>