×

ஒரு நபருக்கு 5 குவாட்டர் தான் கூடுதல் `சரக்கு’ விற்பதற்கு தேர்தல் ஆணையம் தடை டாஸ்மாக்கிற்கும் கிடுக்கிபிடி

பழநி, மார்ச் 8: டாஸ்மாக்கில் கூடுதலான அளவில் மது விற்பனை செய்யக்கூடாதென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. நடத்தை விதி எனக்கூறி அனைத்து தரப்பினருக்கும் ஆப்பு வைத்து வரும் தேர்தல் ஆணையம் டாஸ்மாக்கிற்கும் வரைமுறை வகுத்துள்ளது. இதன்படி ஒரு நபருக்கு அதிகபட்சம் மொத்தமாக 5 குவாட்டருக்கு மேல் விநியோகிக்கக் கூடாது. மொத்த விற்பனை செய்யக் கூடாது. விற்பனை செய்யப்படும் மது வகைகளுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும் என்பது போன்ற வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதுபோல், டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானங்களின் விற்பனை சதவிகிதம் கடந்த சில மாதங்களில் உள்ளது போன்றே இருக்க வேண்டும் என்றும், கூடுதல் விற்பனை இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நேரங்களில் விநியோகம் செய்வதற்கு மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம் என நினைத்திருந்த அரசியல் கட்சிகள் தற்போது கையை பிசைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் சரக்கு கொண்டுவர வழிவகை செய்யும் யோசனையில் கட்சியினர் ஆழ்ந்துள்ளனர்.

Tags : Electoral Commission ,Tasmac ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட...