×

2 நாட்களில் 3 முறை அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு சோதனை

டெல்லி: கடந்த இரண்டு நாட்களில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூன்று முறை அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பை சோதனை செய்துள்ளது. நீண்ட மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பல அடுக்கு ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பின் திறனை நிரூபிக்கும் வகையில் இந்த வாரம் பாதுகாப்புத்துறை முக்கிய சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது. இதன் மூலமாக பலஅடுக்கு ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

இந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் எதிரி நாடுகளில் இருந்து வரும் நீண்ட தூர அணு ஆயுத ஏவுகணைகள் மற்றும் வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்ட எதிரி விமானங்களை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டவையாகும். எதிரி ஏவுகணைகளுக்கு எதிராக பல அடுக்கு ஏவுகணை எதிர்ப்பு திறனை நிரூபிக்கும் வகையில் கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தொடர்ந்து மூன்று சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பூமியின் வளிமண்டல எல்லைக்கு உள்ளேயும் வெளியேயும் வரும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறனை சோதிப்பதற்காக இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. பல்வேறு வகையான எதிரி அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டின் முக்கிய தொழில்நுட்பங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக நிரூபித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Tags : Delhi ,Indian Defense Research and Development Organization ,
× RELATED மதுராந்தகம் அருகே மின்வெட்டால் மூதாட்டி உயிரிழப்பு?