- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கனிமொழி
- சென்னை
- திமுக
- பிரதி பொது செயலாளர்
- சாரி
- அண்ணா அரியலையா
- தேனாம்பேட்டை, சென்னை
- அஇஅதிமுக
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கலந்து கொண்டு பேசியதாவது: அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி வன்கொடுமையை எல்லாம் கடந்து வந்திருக்கிறோம். அந்த நிலையை நோக்கி, அதைத் தாண்டிய ஆபத்தான, பாதுகாப்பு இல்லாத சூழலை தமிழக பெண்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள். இன்று, தவெக நிர்வாகி 50க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி, ஆபாசமாக வீடியோ எடுத்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று தேர்தலுக்கு முன்பு சொன்ன விஜய் தான், தற்போது டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் 42 சதவீத பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள் என்று பேசியுள்ளார். இது யாருடைய உழைப்பு? திமுக அரசின் உழைப்பு. விஜய் முதல்வரான பிறகு தமிழக பெண்களின் நிலை என்ன என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தின் பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட காரணமாக இருந்தது முந்தைய திமுக ஆட்சி தான்.
திமுக கொடுத்த ரூ.1,000 பெற்ற பெண்களுக்குத் தான் தெரியும் பொருளாதாரச் சுதந்திரம் என்னவென்று. தேர்தலில் வாக்குகள் மாறலாம். ஆனால், பெண்களுக்கான சமூக மாற்றத்தை உருவாக்கியவர் தான் மு.க.ஸ்டாலின். நமது வீட்டில் எத்தனையோ விஷயங்களை பேசுகிறோம். ஆனால், நமது வீட்டில் நடந்த மாற்றங்களை பிள்ளைகளிடம் சொல்லித்தர மறந்துவிட்டோம்.
வீட்டில் அரசியல் பேசுங்கள். சமூக இணையதளம் முக்கியம். ரீல்ஸ் முக்கியம். நான் அதை மறுக்கவில்லை. வீட்டில் இருக்கும்போது பிள்ளைகளோடு, பக்கத்து வீட்டில் இருப்பவர்களோடு, உற்றார் உறவினரோடு தயவு செய்து அரசியல் பேசுங்கள். இந்த சமூகத்தை அரசியல்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அரசியல்படுத்தப்பட்ட சமூகம் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கட்டும்.
ஆனால் அரசியல் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல், கடந்த 70 ஆண்டுகளாக நாம் செய்த சாதனையால் எவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள், வேலைக்கு செல்கிறார்கள், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் சூழலை உருவாக்கியிருக்கிறோம். இதைப் பற்றி எல்லாம் பேசுங்கள். அப்படி நாம் அவர்களிடம் இந்தக் கருத்துகளை எடுத்துக் கொண்டு சேர்த்தால் தான் அடுத்த தலைமுறை சரியான முடிவுகளை எடுக்கும்.
