×

தி.கோடு அருகே தனியார் நிலத்தில் அரசு அனுமதித்த அளவை தாண்டி அதிக மண் அள்ளியதாக புகார்

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்செங்கோடு : திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் அருகே உள்ள போக்கம்பாளையம் கிராமத்தில் உள்ள பிள்ளைத்தின்னி கரட்டு பகுதியில், தனியாருக்கு சொந்தமான நிலத்தில், அரசு வழங்கிய நிபந்தனைகளை மீறி, மண் அள்ளப்பட்டுள்ளதால், அப்பகுதியில் மிகப்பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளது.

அந்த பள்ளங்களை மறைப்பதற்காக நகராட்சி கழிவுகள் மற்றும் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. கொட்டப்பட்ட கழிவுகளுக்கு மேல் மண், கற்கள் கொட்டி மூடி மறைக்கப்பட்டு வருகிறது. கழிவு பொருட்களை மண்ணில் புதைத்து மறைப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.

கழிவுகளில் இருந்து வெளிப்படும் நச்சுத்தன்மை, தோல் நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறி, பொதுமக்கள் உடனடியாக இந்த இடத்தை ஆய்வு செய்து அரசு நிர்ணயித்த அளவை மீறி மண் அள்ளப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். குப்பைகளை கொட்டி குழிகளை மூடி நிலத்தடி நீர் மாசுபடுத்துவதை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே முதல்வரின் தனிப்பிரிவிற்கு இது சம்பந்தமான புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது, வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் மனு கொடுத்துள்ளோம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : TRUSCHENGKODU ,SCHOOL ,PILLAITNNI KARATU ,POKAMPALAYAM VILLAGE ,KUMARAMANGALAM ,
× RELATED புதுச்சேரியில் தவறவிடப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்பிலான 240 செல்போன்கள் மீட்பு!!