×

முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர் ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா: டக்வொர்த் லீவிஸ் முறையில் தோல்வி

தம்புல்லா: இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நேற்று தம்புல்லாவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 49 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய இந்திய அணி 49 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது. வைபவ் சூர்யவன்ஷி 44 ரன் (22 பந்து), பிரப்சிம்ரன் 84 ரன் (69 பந்து), ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா தலா 66 ரன்கள் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் அப்துல்லா அகமத்சாய் 5, பர்மனுல்லா சபி 3 விக்கெட் வீழ்த்தினர். மழை மீண்டும் பெய்ததால் ஆப்கானிஸ்தான் அணிக்கு 38 ஓவரில் 294 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணி 25.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. இதனால் டெக்வொர்த் லீவிஸ் முறைப்படி 4 ரன்னில் ஆப்கானிஸ்தான் ஏ அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Tags : India ,Afghanistan ,Duckworth-Lewis ,Dambulla ,Sri ,Lanka ,Sri Lanka ,
× RELATED பாகிஸ்தானுடன் 2வது டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் நிதானம்