×

ஐசிசி ஆண்கள் ஒருநாள் அணி தரவரிசை: முதலிடத்தை தக்க வைத்து கொண்ட இந்திய அணி…

துபாய்: 118 ரேட்டிங் பாயிண்ட்ஸ்களுடன் ஐசிசி (ICC) ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்து உள்ளது. தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்தை விட ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்று இந்திய ஆடவர் அணி முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றி அணியான ஆஸ்திரேலியா, 109 புள்ளிகள் என்ற மாறாத தரவரிசையுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

டாப் 10 இடங்களுக்கான பட்டியலில் ஏற்பட்டுள்ள ஒரே மாற்றம் என்னவென்றால், தென்னாப்பிரிக்கா அணியானது பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்தை பிடித்துள்ளது. தற்போது தென்னாப்பிரிக்கா 102 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது; அதேவேளையில், பாகிஸ்தான் 98 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

6-ஆம் இடத்தில் 96 புள்ளிகளுடன் இலங்கை அணியும், 7-ஆம் இடத்தில் 93 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் அணியும், 8-ஆம் இடத்தில் 89 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியும், 9-ஆம் இடத்தில் 86 புள்ளிகளுடன் வங்கதேச அணியும், 73 புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 10-ஆம் இடத்திலும் உள்ளன.

Tags : ICC ,Dubai ,India ,Zealand ,
× RELATED 12 அணிகள் பங்கேற்கும் 10வது ஐசிசி மகளிர்...