- 10 வது ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை
- இங்கிலாந்து
- இலங்கை
- லண்டன்
- 10 வது ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை T20
லண்டன்: 10வது ஐசிசி மகளிர் உலக கோப்பை டி.20தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது.இதில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இவை தலா 5 அணிகள் என இரு பிரிவுகளாகபிரிக்கப்பட்டு லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றஅணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் 2 பிரிவுகளிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். குரூப் 1ல் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், நெதர்லாந்து, பாகிஸ்தான் தென்ஆப்ரிக்காவும், குரூப் 2ல் நடப்பு சாம்பியன் நியூசிலாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு பர்மிங்காமில் நடைபெறும் முதல் போட்டியில் குரூப் 2ல் இங்கிலாந்து-இலங்கை மோதுகின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு பர்மிங்காமில் பரம எதிரி பாகிஸ்தானுடன் மோத உள்ளது. 30 லீக் போட்டிகள், 2 அரையிறுதி, பைனல் என மொத்தம் 33 போட்டிகள் நடக்கிறது. வரும் 28ம்தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறுகிறது. 30ம் தேதி தி ஓவலில் முதல் அரையிறுதி, ஜூலை 2ம் தேதி 2வது அரையிறுதி, ஜூலை 5ம் தேதி லார்ட்சில் பைனல் நடைபெற உள்ளது.
இதுவரை சாம்பியன்..
இதுவரை நடந்துள்ள 9 உலக கோப்பை மகளிர் டி.20 தொடரிலும் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலியா 6முறை பட்டம் வென்றுள்ளது. இங்கிலாந்து( 2009) நியூசிலாந்து (2024), வெஸ்ட் இண்டீஸ் (2016) தலா ஒருமுறை பட்டம் வென்றுள்ளன. இந்தியா ஒருமுறை கூட பட்டம் வென்றதில்லை. 2020ல் பைனலில் ஆடி தோல்வி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு சொந்த மண்ணில் 50 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்தியா இந்த முறை டி.20 கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. உலக கோப்பையில் இந்தியா இதுவரை 79 போட்டிகளில் ஆடி 42ல் வெற்றி, 34ல் தோல்வி அடைந்துள்ளது. ஒருபோட்டி டை, 2 போட்டி ரத்தாகி இருக்கிறது. வெற்றி சதவீதம் 54.54.
மொத்த பரிசு தொகை ரூ.82 கோடி
இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.82 கோடியாகும். இதில் வெற்றி பெறும் அணிக்கு சுமார் ரூ.10கோடி, 2வது இடம் பிடிக்கும் அணி ரூ.9.71கோடி கிடைக்கும். அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு ரூ.5.60கோடி, பங்கேற்கும் மற்ற அணிகளுக்கு தலா ரூ.2.05 கோடியுடன், ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.25.86லட்சம் வழங்கப்படும்.
