×

சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது

 

சென்னை: சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ் குமார் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக, பொறியாளர் பிரிவின் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் தற்போதைய நிலை குறித்து கேட்டு அறிந்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் சுற்றுலாத்துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் மாவட்ட வாரியாக சுற்றுலா தலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்தும், மாவட்டந்தோறும் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா தலங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் சுற்றுலா அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் சீ. ஸ்வர்ணா, முதன்மைச் செயலாளர்/ சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ம. சு. சண்முகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் சி. லட்சுமி பிரியா, சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Rajesh Kumar ,Chennai ,Tamil Nadu Tourism Development Corporation Partnership ,Valaja Road, Chennai ,Sector ,Tamil Nadu Tourism Development Corporation ,
× RELATED மாற்றம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும்...