×

பலாத்காரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை 4வது மாடியில் இருந்து வீசிய கொடூரம்: 45 வயது கொடூரன் போக்சோவில் கைது

 

திருமலை: பலாத்காரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை 4வது மாடியில் இருந்து தள்ளி கொல்ல முயன்ற 45 வயது டிரைவர் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் கம்மம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. குருகுல பள்ளியில் படித்து வருகிறார். இவரது தாத்தா கம்மத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக உள்ளார். கோடை விடுமுறையில் ​​கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாத்தாவின் வீட்டிற்கு சிறுமி வந்தார். கடந்த 6ம் தேதி, சிறுமி விளையாடுவதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் 2வது மாடிக்கு சென்றார். ​​அதே குடியிருப்பில் வசிப்பவர் முகமது கவுஸ்பாஷா (45), டிரைவர். இவர் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டார். இதில் ஆத்திரமடைந்த முகமதுகவுஸ்பாஷா, சிறுமியை 4வது மாடிக்கு இழுத்து சென்று அங்கிருந்து கீழே தள்ளியுள்ளார். அப்போது பணியில் இருந்த சிறுமியின் தாத்தா, தனது பேத்தி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு முதுகுத்தண்டு, கால், வலது தோள்பட்டை முறிந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். நேற்று முன்தினம் மாலை நினைவு திரும்பிய சிறுமியிடம் அவரது பெற்றோர் கேட்டபோது நடந்த சம்பவம் தெரிய வந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கம்மம் 2வது நகர போலீசில் சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார். போக்சோ மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நேற்று முகமது கவுஸ்பாஷாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் கம்மம் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் நீதிபதி, மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாற்றப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Boxo ,Thirumalai ,Kammam, Telangana ,Kurukula School ,
× RELATED நேருவின் சாதனையை கடந்த பிரதமர்...