திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பெருநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ். கடந்த வருடம் இவர் அப்பகுதியில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்று பீர் வாங்கினார். பாட்டிலில் எம்ஆர்பி விலை ரூ.170 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கடையில் இருந்தவர் 10 ரூபாய் கூடுதலாக வாங்கினார். அது குறித்து ஆகாஷ் கேட்டபோது, விலை கூடி விட்டதாகவும், கம்ப்யூட்டரில் உள்ள விலையின்படியே வாங்க முடியும் என்றும் கடை ஊழியர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஆகாஷ் பத்தனம்திட்டா மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், விலை உயர்த்தப்பட்டாலும் பழைய இருப்பு காலியாகும் வரை அதே விலையில் தான் விற்க வேண்டும் என்று கூறி மதுக்கடை மேலாளருக்கு நீதிமன்ற செலவு உள்பட ரூ.25,010 அபராதம் விதித்து உத்தரவிட்டது.
