×

நீட் மறுதேர்வு குறித்து நாடாளுமன்ற குழு முன்பாக இன்று உயர் அதிகாரிகள் ஆஜர்

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு தொடர்பாக கடந்த மே 3ம் தேதி நடத்தப்பட்ட நீட்-யுஜி நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வரும் 21ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில், நீட் மறுதேர்வு தொடர்பாக சுகாதாரம், குடும்ப நலன் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உயர்கல்வி மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள், தேசிய தேர்வு முகமை, தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியது. அதன்பேரில் நிலைக்குழு முன்பாக உயர் அதிகாரிகள் இன்று ஆஜராக உள்ளனர்.

Tags : New Delhi ,NEET-UG ,NEET… ,
× RELATED மம்தா பானர்ஜி வீட்டில் சோதனை...