×

திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளித்ததால்தான் தவெக ஆட்சி அமைத்துள்ளது; தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும்: எடப்பாடி பழனிச்சாமி

 

சேலம்: தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும், அந்த ஆட்சியின் நாற்காலியின் 2 கால்கள் இரவல். திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளித்ததால்தான் தவெக ஆட்சி அமைத்துள்ளது. விசக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இருக்கும் வரைதான் தவெக ஆட்சி. எத்தனை நாட்களுக்கு இந்த ஆட்சி நீடிக்கும் என தெரியவில்லை.

ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பது தெரிந்தும் கவர்ச்சி அறிவிப்புகளை விஜய் வெளியிட்டது ஏன்?; இப்போது திட்டங்களை அறிவிக்கிறார்கள்; அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை அறிவிக்கவில்லை. மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வெற்று வாக்குறுதியா? அல்லது நிறைவேற்றுவீர்களா? தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.

அரசு அதிகாரிகளே அரசாங்கத்தை நடத்தினால் முதல்-அமைச்சர் எதற்கு என மக்கள் கேட்கிறார்கள். அதிமுக தீர்ந்துபோன கட்சி அல்ல, மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்த கட்சி. பதவி வந்துவிட்டால் தலைகால் புரியாமல் ஆடுகின்றனர். பதவி வரும்போது பணிவு வர வேண்டும்.திரைப்படத்தில் நடித்து வெற்றி பெற்றீர்களே தவிர மக்களுக்கு சேவை செய்து வெல்லவில்லை

பதவி வந்துவிட்டால் தலைகால் புரியாமல் ஆடுகின்றனர். பதவி வரும்போது பணிவு வர வேண்டும்.திரைப்படத்தில் நடித்து வெற்றி பெற்றீர்களே தவிர மக்களுக்கு சேவை செய்து வெல்லவில்லை. ‘மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். எந்தக் கொம்பனாலும் அதிமுகவை உடைக்க முடியாது, தப்புக் கணக்கு போடாதீர்கள். அதிமுகவில் வெற்றி பெற்ற நான்கு பேர் ராஜினாமா செய்து உள்ளார்கள்; உங்களை வரலாறு மன்னிக்காது என்று இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 

 

 

Tags : DAVEKA REGIME ,DIMUKA ALLIANCE PARTIES ,EDAPPADI PALANICHAMI ,Salem ,Takeka ,Dimuka ,Dweka ,
× RELATED மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த...