×

டெல்லி டு சிலிகுரி.. வெறும் 6 மணி நேரத்தில் பயணம்..! மே.வங்கத்திற்கான புல்லட் ரயில் திட்டத்தை அறிவித்த ரயில்வே அமைச்சர்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், டெல்லி, லக்னோ, வாரணாசி மற்றும் பாட்னா ஆகிய நகரங்களை மேற்கு வங்கத்தின் சிலிகுரியுடன் இணைக்கும் வகையிலான ‘புல்லட் ரயில்’ வழித்தடத்தை அமைக்க பிரதமர் திட்டமிட்டு உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மேற்கு வங்காளத்திற்கு ஒரு புல்லட் ரயில் திட்டம் வரவுள்ளது. இது லக்னோ, வாரணாசி மற்றும் பாட்னா வழியாக டெல்லியையும் – சிலிகுரியையும் இணைக்கும். புல்லட் ரயிலில் இந்த பயணத்தை மேற்கொள்ள வெறும் ஆறு மணிநேரம் மட்டுமே ஆகும் என்று வைஷ்ணவ் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்திற்கான ரயில்வே நிதி ஒதுக்கீடு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு காலத்தில் ரூ4,000 கோடி, ஆனால் மோடி அரசின் கீழ் ரூ.14,205 கோடியாக அதிகரித்துள்ளது. அதே போல முந்தைய மாநில அரசு அனுமதி வழங்காததால் பல ரயில்வே திட்டங்கள் தாமதமடைந்ததாக மத்திய அமைச்சர் வைஷ்ணவ் குற்றம் சாட்டினார்.

மெட்ரோ, ரயில்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து வழித்தடம் குறித்துப் பேசிய ரயில்வே அமைச்சர், பல மாநிலங்களுக்கு முன்னதாகவே மேற்கு வங்கத்திற்கு ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ மற்றும் ‘அம்ரித் பாரத்’ ரயில்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்

Tags : Delhi ,Siliguri ,Railway Minister ,West Bengal ,Kolkata ,BJP ,Lucknow ,Varanasi ,Patna ,Union Railway ,Minister ,Ashwini… ,
× RELATED கருத்து வேறுபாடுகளை அண்ணாமலை முன்பே...