திருத்துறைப்பூண்டி, ஜூன் 6: அதிமுக முன்னாள் முதல்வரின் ஆணைக்கிணங்க, திருவாரூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி. மூர்த்தி ஆலோசனைப்படி திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் சண்முகசுந்தர் தலைமையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் ஏமாற்றி விவசாயிகளை வஞ்சிக்கும் முதல்வரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் , திருத்துறைப்பூண்டி மத்திய கூட்டுறவு வங்கி கிளை முன்பும் மற்றும் சிங்கிளாந்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்றது.
இதேபோல திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் தலைக்காடு, கொக்கலாடி, பிச்சன்கோட்டகம், எழிலூர், ஆதிரெங்கம் மேட்டுப்பாளையம், மணலி, கச்சனம், திருத்தங்கூர் ஆகிய இடங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
