×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2வது நாளாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி

 

அறந்தாங்கி, ஜூன் 26: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) செல்வம் நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக நேரில் பார்வையிட்டு அதிரடி ஆய்வு மேற்கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சீமைக்கருவேல மரங்களை முழுவதுமாக அகற்றிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மூக்குடி ஊராட்சி, மறமடக்கி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கண்மாய்களிலும் மற்றும் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையார்கோவில் ஏரி, கீழச்சேரி ஊராட்சி, தாமரைக்குட்டை குளம், நெட்டியேந்தல், ஒக்கூர் ஊராட்சி, குருவிக்கொண்டனேந்தல் ஆகிய கிராமங்களிலும் மற்றும் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், தப்பத்தான் ஏரி, கோலேந்திரம், சாத்தியடி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கண்மாய்களிலும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருவதை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) செல்வம் நேற்று நேரில் பார்வையிட்டு அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கண்மாய் மற்றும் குளங்கள் ஆகிய நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல் மரங்கள் அகற்றப்பட்ட பணிகளின் தன்மை, மேற்கொள்ளப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, சீமைக்கருவேல மரங்கள் வேருடன் அகற்றப்படுவதை கண்காணித்து உறுதி செய்திட தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில், மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்/தணிக்கை) வேதலெட்சுமி, வட்டாட்சியர் கவியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேட்டுச்சாலையிலும் மறியல்
இதே கோரிக்கையை வலியுறுத்தி இலுப்பூர் அருகே மேட்டுச்சாலை என்னும் இடத்திலும் ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இலுப்பூர் டிஎஸ்பி திவ்யா சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Pudukkottai district Arantangi ,Chennai High Court Justice ,Pudukkottai District Arantangi Avudiargo ,Manamalkudi Oradchi Union Areas ,Chennai High Court ,
× RELATED வேளாங்கண்ணி-சென்னை எழும்பூர் வரைஜூலை 1 முதல் மீண்டும் ரயில் சேவைதுவக்கம்