×

மேல்வணக்கம்பாடி ஊராட்சி பள்ளியில் புகுந்து கணினி, ஹார்டிஸ்க் திருட்டு

செங்கம் : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்வணக்கம்பாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி நடப்பு கல்வியாண்டையொட்டி நாளை மறுதினம் திறக்கப்பட உள்ளது.

இதையொட்டி நேற்று பள்ளி வகுப்பறை, சமையலறை, தலைமையாசிரியர் அறை என அனைத்து பகுதிகளையும் தூய்மைப்படுத்தும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. அப்போது பள்ளியில் உள்ள ஒரு அறையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஊழியர்கள் உடனடியாக தலைமையாசிரியருக்கு தெரிவிக்க முயன்றன். ஆனால் அண்மையில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் பணி நிறைவு பெற்று சென்றதால் யாரிடம் தெரிவிப்பது என தெரியாமல் குழப்பமடைந்தனர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் மேல்செங்கம் போலீசாருக்கு தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கோடைவிடுமுறைையயொட்டி பூட்டிக்கிடந்த பள்ளியை யாரோ மர்மஆசாமிகள் கதவு உடைத்து கணினி, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக மேல்செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Malvanakambadi Orratsi school ,Chengam ,Uradachi Union Secondary School ,Chengam Circle Mellvanakampadi, Tiruvannamalai District ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை