×

பதிவுத்துறையில் 4 டிஐஜிக்கள் மாற்றம்

சென்னை: பதிவுத்துறையில் 4 டிஐஜிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவு: வேலூர் துணை பதிவுத்துறை தலைவராக (டிஐஜி) உள்ள அருள்சாமி, பதிவுத்துறை தலைவரின் நேர்முக உதவியாளராக (பொது) நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பதிவுத்துறை பயிற்சி நிலைய இயக்குநராக உள்ள மஞ்சுளா, செங்கல்பட்டு துணைப் பதிவுத்துறை தலைவராகவும், சேலம் துணைப் பதிவுத்துறை தலைவர் சுபிதா லட்சுமி, வேலூர் துணைப் பதிவுத்துறை தலைவர் பொறுப்பை கூடுதலாகவும், சென்னை துணைப் பதிவுத்துறை தலைவர் மீனாகுமாரி, பதிவுத்துறை பயிற்சி நிலைய இயக்குநர் பொறுப்பை கூடுதலாகவும் கவனிப்பார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Commercial Tax and Registration Department ,Kumaragurubaran ,Arulsamy ,Registration ,Department ,Vellore ,Chennai Registration Department… ,
× RELATED கோடை விடுமுறை முடிந்து சென்னை...