×

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படுகின்ற கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. சுமார் 25 நாட்கள் வாட்டி எடுத்து வந்த கத்திரி வெயில் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. கத்திரி வெயில் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் என்பது குறைய வில்லை. இன்று வரை வெயிலின் தாக்கம் இருக்கும். தொடர்ந்து நாளை முதல் வெயிலின் அளவு படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இன்று 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் மத்தியகிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருச்சி, நாமக்கல், நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், வேலூர்,திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று (மே 30) கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Chennai Meteorological Centre ,Katri Sun ,
× RELATED நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!