×

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!

 

சென்னை: நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது தாயார் மோகினி (85) இவர் இன்று காலை வயது மூப்பு காரணமாக காலமானார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித் வீட்டில் அவரது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. அஜித்தின் தாயார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்ததாவது; அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

 

Tags : Chief Minister ,Vijay Mourangal ,Ajit ,Mokini ,Chennai ,Vijay ,Palawakathil ,
× RELATED திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி...