×

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மே 28: பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுக்க கூடாது என தடை விதித்துள்ள ஒன்றிய பாஜ அரசை கண்டித்து எஸ்டிபிஐ சார்பில் நேற்று சிடிசி கார்னரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் அன்வர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பசீர் அகமது, தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஜிபூர் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த ஆர்பாட்டத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுக்க தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Union Government ,Tiruppur ,CDC Corner ,STBI ,Union BJP government ,Qurbani ,Bakrid festival ,South District ,President ,Anwar.… ,
× RELATED பொது இடத்தில் குப்பை கொட்டிய பனியன் நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம்