×

தஞ்சாவூர் அருகே காவல் நிலையத்தில் பரபரப்பு; எஸ்எஸ்ஐ, 2 தலைமை காவலர்களை உருட்டுக்கட்டையால் தாக்கிய பெண்கள்: 7 பேர் கைது

 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ, 2 போலீசாரை உருட்டுக்கட்டையால் தாக்கிய 6 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் ராமதாஸ். இவர், நேற்றுமுன்தினம் இரவு போலீஸ் நிலையத்தில் சொத்து பிரச்னை புகார் மனு தொடர்பாக இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தார். அப்போது அந்த இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருவரை ஒருவர் மாறி மாறி ஆபாச வார்த்தைகளால் திட்டி களேபரம் செய்தனர். இதையடுத்து இருதரப்பினரையும் எஸ்எஸ்ஐ ராமதாஸ் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த இரு தரப்பினரும், காவல் நிலையத்துக்கு வெளியே கிடந்த உருட்டு கட்டைகளால் எஸ்எஸ்ஐ ராமதாசை தாக்கினர். இதை பார்த்து தடுக்க வந்த ஏட்டுகள் கார்த்தி, கார்த்திக்கேயன் ஆகியோரையும் தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக இருதரப்பினரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில் தாக்குதல் நடத்தியவர்கள் கபிஸ்தலம் அருகே கல்விக்குடியை சேர்ந்த நடராஜன் மகன் விக்னேஷ்(28), நடராஜன் மனைவி மாலதி(47), விக்னேஷ் மனைவி கிருஷ்ணவேணி(19), ஆந்திர மாநிலம் திருப்பதி தட்டித்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ரமா(30), கும்பகோணம் செட்டிமண்டபத்தை சேர்ந்த ெசந்தில் மனைவி விஜயலட்சுமி(43), பட்டீஸ்வரத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி மகேஸ்வரி(35), கல்விக்குடியை சேர்ந்த சுரேஷ் மனைவி மீனாட்சி(37) ஆகியோர் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thanjavur ,SSI ,Ramadoss ,Kapisthalam ,
× RELATED மூட்டைக்கு ரூ.2,500 வரை விலை சரிவு;...