லால்குடி, மே 25: புள்ளம்பாடி பகுதியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 595 காளைகள் சீறிப்பாய்ந்தது. காளைகளை அடக்க 400 மாடு பிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். இதில் 36 பேர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதையொட்டி புள்ளம்பாடி-திருமழபாடி சாலையின் தெற்கு பகுதியில் மேடை அமைத்து குளுந்தாளம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு கோவில் மாடுகளை ஊர்வலமாக கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் தாசில்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் ஜல்லிக்கட்டு கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் லால்குடி ஆர்டிஓ தர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.
