×

முசிறியில் தொகுதியில் இன்று திமுக தேர்தல் முடிவு குறித்த கள ஆய்வு குழு கூட்டம்

 

முசிறி, மே 25: திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வு குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளதாக திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர், மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, முசிறி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவு குறித்த \”கள ஆய்வு குழு கூட்டம் இன்று (25ம் தேதி) நடைபெறுகிறது. முசிறி அழகப்பட்டி ரோட்டில் உள்ள ஆர்கேஎஸ் மினி மஹாலில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இக்கூட்டம் நடைபெறும்.

Tags : DMK ,Musiri ,Trichy North District Party ,Kaduvetti Thiagarajan ,Trichy district ,
× RELATED ஓடும் பஸ்சில் பெண்ணிடம் செயின் திருட்டு