திருச்சி, மே 25: திருச்சி மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பாட்டிற்கு எடுத்து செல்ல மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
திருச்சி மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரகவளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 186 ஏரி, குளங்களில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் மற்றும் சாதாரண மண்ணை விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களின் சொந்தப் பயன்பாட்டிற்காக இலவசமாக வெட்டி எடுத்துச் செல்லலாம். இந்த மண்ணை வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று, அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் எடுத்துக்கொள்ளவேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.tnesevai.tn.gov.in இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
