இரட்டை கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மனு

மதுரை, மார்ச் 3: மதுரை மாவட்டம், குன்னத்தூரைச் ேசர்ந்த பாஸ்கரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: குன்னத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக எனது சகோதரர் கிருஷ்ணராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவரும், முனியசாமி என்பவரும் கடந்த அக்டோபரில் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் ஊராட்சித் தலைவர் திருப்பதி உள்ளிட்டோர் மீது கருப்பாயூரணி ேபாலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். போலீசாரின் விசாரணை முறையாக நடக்கவில்லை. உண்மை குற்றவாளிகளை தப்பவிடும் நோக்கத்தில் சிலருக்கு சாதகமாக செயல்படுகின்றனர். எனவே, வழக்கின் விசாரணையை முறையாக நடத்தும் வகையில், உண்மை குற்றவாளிகள் தப்பாமல் கைது செய்து, தண்டனை பெறும் வகையில் இந்த இரட்டை கொலை வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆர்.ஹேமலதா, குன்னத்தூர் இரட்டை கொலை வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை டிஎஸ்பி தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஏப்.22ம் தேதி தள்ளி வைத்தனர்.

Related Stories:

>