×

5 வெளிநாடுகளில் சுற்று பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி!!

டெல்லி: அரசு முறை வெளிநாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். UAE, நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார். இந்த 5 நாட்கள் பயணத்தில் எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் கனிமங்கள் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அவர் 5 நாடுகளுக்கான முக்கியத் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.

இதனையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில், பெட்ரோலிய இருப்புக்கள், நீண்டகால எல்பிஜி விநியோகம், பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடங்கிய தொடர்ச்சியான முக்கிய ஒப்பந்தங்களில் இந்திய கையெழுத்திட்டது. மேலும், இந்தியாவில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதாக அபுதாபி உறுதியளித்துள்ளது. நெதர்லாந்து பயணத்தின் போது, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள் மற்றும் பிற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 17 ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது.

இந்த சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டத்தில், இந்தியாவும் ஸ்வீடனும் தங்களது நல்லுறவை மேம்படுத்த வழிவகை செய்தன. நார்வே நாட்டுக்குச் சென்றபோது, தூய்மையான ஆற்றல், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன், நீலப் பொருளாதாரம், பசுமைக் கப்பல் போக்குவரத்து, டிஜிட்டல் தொழில்நுட்பம், விண்வெளி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டன. தனது சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டமான இத்தாலியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

Tags : Modi ,Delhi ,UAE ,Netherlands ,Sweden ,Norway ,Italy ,
× RELATED தாய் மற்றும் சேய் நலவாழ்வுத் துறையில்...