×

சென்னையில் ரூ.300 கோடி வங்கிக் கடன் மோசடி: அமலாக்கத்துறை சோதனை

சென்னை: பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) சுமார் ரூ.300 கோடிக்கும் மேல் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றுப் பெருமளவில் நிதி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னையில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.

சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகள் உட்பட மொத்தம் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனையானது துப்பாக்கி ஏந்திய மத்தியப் பாதுகாப்புப் படை போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. சென்னை அயனாவரத்தில் குல்னாஸ் பேகம் என்ற பைனான்சியர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையானது இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல திருமங்கலம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தில் லட்சுமணசாமி என்பவர் வீட்டிலும் அவரது மைத்துனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

சோதனை முடிவிலே இன்று என்ன என்ன பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Enforcement Directorate ,State Bank of India ,SBI ,ED ,
× RELATED திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உள்பட 3 பேர் உயிரிழப்பு