திருப்பூர்: நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட காங்கேயம் சாலை, புதுப்பாளையம் அருகே ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து ஆவணங்களை சரிபார்த்த போது அதில் புகை சான்றிதழ் இல்லை என காவல் உதவி ஆய்வாளர் மோகன் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் ரூ.200 லஞ்சம் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
லஞ்சம் வாங்கிய காட்சியை அங்கு இருந்த யாரோ ஒருவர் மொபைல் போனில் ரகசியமாக வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சம்பவம் குறித்து விசராணை நடத்திய மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் ரூ.200 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் மோகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
